விவசாயம்
விவசாயி
வரண்ட மண்ணை
வெட்டி வரப்பாக்கினேன்
மேகத்து காரன்
மழை தராமல் ஏமாற்றினான்
விதையும் உரமும்
வாங்க போராடினேன்
அதிக விலைக்கும்
குறைந்த தரமும்
தந்து ஏமாற்றினான்
பழமும் காயும்
நல்ல தரமாக்கினேன்
பணமும் விலையும்
குறைவாக்கினான்
கடனும் அடகும்
நிறைவாக்கினான்
சோகத்தை காதில்
பறையாக்கினான்
நல்ல விதையை
ஊன மாக்கினான்
பீட்சா,பிரட்டை
தினமும் சாதமாக்கினான்
விவசாயின் வாழ்கையை
கஷ்டத்துக்கு தானமாக்கினான்
யார் அவன் ???
கேவலம்
நாகரிக பித்து
பிடித்த
கிறுக்கன் அவன்.
--------Sibi