Gகௌசல்யா என் கூட பிறக்காத தங்கை

அக்டோபர் 09 2015, வெள்ளிக்கிழமை

அப்பாடா இன்னைக்கு ஒரு நாள் போயிடுச்சினா அடுத்த ரெண்டு நாள் leave என்கிற சந்தோசத்துல வழக்கம் போல office க்கு கிளம்பி வந்துட்டேன். ஒரு 10 மணிக்கு மேல facebook பக்கம் போனேன். சும்மா அப்படியே மேலோட்டமா facebook பார்த்துட்டே வரும் போது எங்க ஊர் நகராட்சி (மதுராந்தகம்) நியூஸ் ஒன்னு தினத்தந்தி-ல வந்து இருந்தது. செய்திகளே படிக்க பிடிக்காத எனக்கு ஏனோ அந்த செய்திய படிக்கணும்-னு மனசு சொல்லுச்சி.. உடனே படிச்சேன் “பள்ளி மாணவி ஒருத்தவங்க ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் ” தற்கொலை செய்து கொண்டாராம்.

அந்த பெண் பிளஸ் 2 மாணவி கௌசல்யா. இறப்பதற்கு முன் 2 பக்கத்திற்கு தன் சாவுக்கு யார் காரணம் என்பதை தெளிவாக எழுதி இருந்தாங்க. எனக்கு அந்த கடிதத்தை படிக்கும் போதே என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் துளிகள். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமான வரிகள். என் மனம் நொந்து கொண்டது அந்த பெண்ணுக்காக.. பிறகு எப்பவும் போல என் வேலையை பார்க்க சென்று விட்டேன்.

மாலை 4:30 மணியளவில் மறுபடியும் facebook வந்தேன். அதே செய்தி அந்த பெண்ணின் புகைப்படத்துடன் மற்றும் அந்த ஆசிரியர் & அந்த கடிதத்துடன் யாரோ ஒருவர் share செய்து இருந்தார். அந்த பெண்ணையும் & கடிதத்தையும் பார்க்கும் போது “ஐயோ பாவம்.. இந்த வயசுல இவ்ளோ ஒரு வலியோட வாழ்க்கைய இந்த புள்ள முடிச்சிகிச்சே-னு” எனகுள்ளவே புலம்பிகிட்டேன். இதை download பண்ணி என் அம்மா கிட்டே காட்டனும்-னு download பண்ணேன். ஆனால் மறந்து அப்படியே வீட்டுக்கு வந்துட்டேன். அப்படியே அந்த செய்திய மறந்துட்டேன்.


அடுத்த நாள் சனிக்கிழமை,

புரட்டாசி 4வது சனி, so வழக்கம் போல குளியல், கோவில்-னு போய்ட்டு கழனி-க்கு போயிட்டேன். மாலை வரை அங்கேயே தான் இருப்பேன் எப்பவுமே.. இரவு பெருமாள் சாமீ ஊர்வலம் போகும் எங்க ஊர்-குள்ள., அதுல நானும் போவேன். அப்படி போகும் போது என் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கும் என் பள்ளி தோழி ஒருவர் அவங்க வீட்டுக்கு பக்கமா போகும் போது என் அருகில் வந்து “எங்க வீட்ல ஒரு விஷயம் நடந்துச்சி… தெரியுமா உனக்கு-னு கேட்க…நான் உடனே எப்பவும் போல அவங்கள கிண்டல் பண்ணுற பழக்கத்துல உனக்கு கல்யாணமா-னு கேட்டேன்.. ”

உடனே அவங்க …ச்சீ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல-னு சொல்லும் போதுதான் நான் அவங்க முகத்தை கவனித்தேன், பெரிய சோகம் பரவி இருந்தது. நான் என்ன ஆச்சி-னு கேட்டேன். அதற்கு அவங்க போன வருஷம் நம்ம ஊர் அம்மன் திருவிழா-ல dance program-ல எங்க relation ஒருத்தவங்க super-ரா dance பண்ணாங்கன்னு சொன்னியே அவங்க இறந்துட்டாங்க-னு சொன்னங்க.. நான் உடனே ஒரு பெரிய வருத்ததுடன் எப்படி என்று கேட்டேன். தூக்கு போட்டுகுச்சி-னு சொல்ல, நான் ஏன் கேட்க.. ஸ்கூல்-ல sir பாலியல் தொல்லை-னு சொல்லும் போதே நான் குறுக்கிட்டு.. நேற்று படித்த செய்தியை வைத்து மீதியை நான் சொல்ல.. ஆமாம் என்றார் என் தோழி., அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா-னு கேட்க., நான் நேற்று ஆபீஸ்-ல படிச்சத சொன்னேன். ஆனா அது இவங்கதான்-னு எனக்கு தெரிலப்பா-னு அழாத குறையாக சொன்னேன்.

எனக்கு அந்த செய்தி படிக்கும் போது அதுல உனக்கு தெரிஞ்ச ஊர் பெயர் போட்டு இருந்துச்சி அபோ உன் ஞாபகம் வந்துச்சி ஆனா அவங்க உன் சொந்தம்-னு தெரியாம போச்சி-னு புலம்பினேன். ஊர்-ல நிறைய பேர் போய்ட்டு வந்து இருகாங்க போல அந்த ஊர்-க்கு..

சாமீ ஊர்வலம் போனதால என்னால ரொம்ப நேரம் அவங்ககிட்டே பேச முடியல.. ஆனால் எனக்கு சாமீ ஊர்வலத்தில் சரியாய் இருக்க முடியவில்லை.. எனக்குள்ள ஒரே உறுத்தல்கள்.., ..ச்சா.. இவங்க செய்தியவா நாமா பொதுவா படிச்சிட்டு சாதாரணமா இருந்திருக்கோம்-னு?..
எனக்கு அவங்க முகம் ஞாபகம் இல்ல, நான் அவங்க முகத்த பார்த்ததும் இல்ல.. அவங்களுக்கும் எங்க ஊருக்கும் இருந்த ஒரே தொடர்பு அவங்க என் தோழியின் உறவினர். அதனாலதான் போன வருட திருவிழாவிற்கு எங்க ஊர்க்கு வந்தாங்க..

இரவு நடன நிகழ்ச்சி..மாலை அவங்க குடும்பத்தோட எங்க ஊர்-க்கு வந்து இருந்தாங்க.. இரவு நடன போட்டியில் சற்றும் யோசிக்காமல் கலந்து கொண்டு நான்கு பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். நான் மிகவும் ரசித்த நடனம் “கந்தசாமி படத்துல வரும் allegra.. allegra..” song., கிட்டத்தட்ட ஸ்ரேயா போலவே dance பண்ணாங்க.. எங்க ஊர் பசங்களும் dance பண்ணாங்க.. ஆனால் எனக்கு அவங்க dance ரொம்ப பிடிச்சி இருந்தது. கடைசியா கரகாட்டகாரன் மாரியம்மா பாடலுக்கும் நடனம் ஆடினார்கள்.

அன்று இரவே என் தோழி பெயர் சொல்லி அவங்க வீட்டுக்கு வந்து இருக்கும் ஒரு பொண்ணு ஆடின dance சூப்பர்மா-னு என் அம்மாகிட்டே விமர்சனம் பண்ணேன். என் அம்மாவும் ஆமாம்-டா நானும்-தான் பார்த்தேன் அருமை-னு உண்மையா சொன்னங்க.. கிட்டத்தட்ட அன்று இரவே அவங்க எங்க ஊர்க்கு நல்ல popular ஆகிட்டாங்க.. என் மாமா பொண்ணு கூட பரதநாட்டியம் ஆடினாங்க.. அதனால என் மாமா பையன் எல்லா டான்ஸ் வீடியோ எடுத்தான். அடுத்த நாள் காலை-ல என் லேப்டாப்-ல அவங்க மொபைல் connect பண்ணி என் மாமா பொண்ணு ஏதோ data எடுத்துட்டு இருக்கும் போது நான் நேற்று நடந்த எல்லா videos பார்த்தேன் & என் laptopl -ல save பண்ணிகிட்டேன். ஆபீஸ் போனதும் நம்ம ஊர் பெயர் போட்டு youtube -ல இந்த videos upload பண்ணனும்னு..

அடுத்த நாள் என் தோழி, என் தங்கை தோழி & வேற யாரோ ஒருவர் உடன் எங்க தெருவில் இருக்கும் என் தங்கையின் தோழி வீட்டு வாசலில் பூ கட்டி கொண்டு இருந்தார்கள். நான் தெருவில் போகும் போது என்னை எப்பவும் போல கலாய்க்க கூப்பிடர்கள். நான் இதுவரை அவங்க வீட்டுக்கெல்லாம் போனதே இல்ல ..so தயங்கி தயங்கி போனேன். என்னை ஏதோ சொல்லி கேலி கிண்டல் பண்ணும் போதுதான் எனக்கு நேற்று என் தோழி உறவினர் ஆடிய நடனம் ஞாபகம் வந்தது.

உடனே, நான் அது சரி.. நேற்று dance -ல உங்க சொந்தகார பொண்ணு ஒருத்தவங்க கந்தசாமி song -க்கு டான்ஸ் பண்ணாங்களே செம-னு சொல்லிட்டு அது யாருப்பா னு கேட்டேன். என் தோழி & என் தங்கையின் தோழி இருவரும் ஒரே நேரத்தில் பூ கட்டுவதை நிறுத்தி விட்டு என்னை கிண்டலாக முறைத்து கொண்டே அது இவங்கதான்-னு தெரிஞ்சிகிட்டே கேட்குற பார்த்தியா-னு கூட இருந்த வேற ஒருந்தவங்கள கட்டினாங்க.. அதுவும் இல்லாம அவங்க எனக்கு மாமா பொண்ணு உனக்கு sister -னு சொன்னங்க..

நான் உடனே அம்மா தாயே நான் அப்படிலாம் ஒன்னும் நினைக்கல…. நான் நல்லா dance பண்ணாங்கன்னு தானே சொன்னேன்.. அதுக்கு ஏன் இப்படிலாம்-னு கேட்டேன். இருந்தாலும் எனக்கு உள்ளுக்குள்ள ஒரு ஆச்சர்யம். நேற்று மாலை ஊர்க்கு வந்த பொண்ணு இரவே புது இடம், மேடை ஏறி ஆட வேண்டும் என்கிற கூச்சம் இல்லாமல் dance பண்ண முடியும்.. அதுவும் ஒரு பொண்ணா?!… ஆனால் இப்போ இவ்ளோ பேசிட்டு இருக்கோம் குனிஞ்ச தலை நிமிரவே இல்ல.. உண்மையிலே பெருமை பட்டு கொள்ள வேண்டிய ஒரு பெண்., என்று எனக்குள்ள நினைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்.

இதையெல்லாம் நினைத்து கொண்டே சாமீ ஊர்வலத்தில் பாதி தூரம் கடந்து விட்டு இருக்கேன். எனக்கு ஏதோ ஒரு வலி உறுதி கொண்டே இருந்தது. அந்த செய்தியை மறுபடியும் முழு மனதாய் வலியுடன் படிக்க தோன்றியது. ஐயோ இவங்கதான்-னு தெரிஞ்ச பிறகுதான் எனக்கு அந்த செய்தியை சாதரணமா படிச்சிட்டு வந்தது ஒரு குற்ற உணர்வு போல இருந்துச்சி.. அப்போதான் நான் download பண்ணுது, அம்மாகிட்டே காட்டணும்-னு நெனச்சது எல்லாம் ஞாபகம் வந்தது.

நேரம் போக போக facebook -ல அந்த news- க்கு யாரோ ஒருத்தன் சொன்ன comment கூட ஞாபகம் வந்தது. இறந்து போன அந்த சகோதரி உயர்ந்த ஜாதி.. தொல்லை தந்த அந்த ஆசிரியர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லி அங்கேயும் அரசியல் போய் கொண்டு இருந்தது. எனக்கு அப்போது பெரிதாய் தோன்றவில்லை அந்த வலிகள். ஆனால் இப்பொது என்னையும் அறியாமல் வலிக்கிறது.

ஒரு வழியாக ஊர்வலம் முடிந்து இரவு 12 மணி போல் வீடு வந்தேன், அம்மா அரை தூக்கத்தில் gate திறக்க அம்மாவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே கேட்டுவிட்டேன் “அம்மா, போன வருஷம் திருவிழா -ல dance பண்ண அவங்க இறந்துடங்களா-னு..”, உடனே அம்மா அதெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் நீ போயி இப்போ தூங்கு என்றார்கள்.

அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை,

கழனியில் நெல் நடவு அதனால எல்லாரும் ஒரே BUSY . எனக்கு மட்டும் அதே உறுத்தல்கள். அந்த சகோதரி இறந்து இருக்கவே கூடாது என்று. நேற்று என் தோழியிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்றும் கழனியில் வேலை. மதியம் போனால் வீட்டில் இருப்பார்களா? என்ற கேள்வி. mobile எடுத்தேன் facebook போனேன். அந்த சகோதரி நிகழ்வுக்கு எத்தனை support , evlo shares , evlo comments , ஆனால் நான் இவ்ளோ அருகில் இருந்தும் மற்ற செய்திகளை போல் சாதரணமாக படித்து விட்டு வந்துவிட்டேனே என்று நொந்துகொண்டேன். நிமிடத்திற்கு நிமிடம் அந்த சகோதரி ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அந்த ஆசிரியர் சாக கூடாது ஆனால் நமக்கு ஏன் இன்னும் மரணம் வரவில்லை என்று நினைக்கும் அளவிற்கு சித்ரவதை பட வேண்டும் என்று வேண்டி கொண்டேன்.

அப்படியே அன்றைய பொழுது போனது. இரவு 07 மணிக்கு அவங்க வீட்டுக்கு போனேன். தோழி என்னை பார்த்ததும் வெளியே வந்தார்கள். கூடவே அவங்க அம்மா இருந்தாங்க.. நான் அவங்க வீட்டுக்கு போவது இது 2nd டைம். நான் நேத்து சாமீ ஊர்வலம் போனதால் உன்கிட்டே சரியாய் பேசிக்க முடில, என்னால அதுக்கு அப்புறம் சரியாய் சாமீ ஊர்வலம் போக முடியல-னு சொன்னேன். அதுக்கு அவங்க சரி விடுடா.. நான் எதுவும் நெனச்சிகுல-னு சொல்லிட்டு என் மொபைல்-ல இருந்த அந்த சகோதரி & her related photos பார்த்துட்டு இதெல்லாம் நாங்க பார்க்கவே இல்ல டா.. ஒரே கூட்டம், எங்களால இதெல்லாம் பார்க்க முடியல என்று சொல்லிட்டு நடந்ததை சொன்னார்கள்.

அந்த சகோதரி தனது பாட்டி வீட்டில் தங்கி படித்ததால் தன் மனதில் உள்ள விசயங்களை share பண்ண வீட்டில் வேற யாருமே இல்லை. யாராவது இருந்து இருந்தால் இன்று நாம் அந்த சகோதரியை இழந்து இருக்க மாட்டோம். படிப்பு, விளையட்டு, கலை நிகழ்ச்சி என அனைத்திலும் முன்னிலை பெற்ற அந்த சகோதரி வாழ்வின் முடிவை இப்படி பின்னிலையில் சென்று விட்டாரே என்பதுதான் பெரிய வருத்தம்.

அந்த கடிதத்தின் ஒவ்வொரு வரிகளும் உருக்கமானவை.. முக்கியமா இறுதி வரிகள்..

தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒரு மன உறுதி, தைரியம் வேண்டும். ஆனால் கௌசல்யா உயிரோடு இருந்து போராடி ஜெயித்து இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணாக அதன் பிறகு நிம்மதியாக வாழ முடியாதுடா என்று என் தோழி என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொல்வதை நான் புரிந்து கொண்டேன். பிறகு நீண்ட நேரம் அதையே பேசி விட்டு அந்த சகோதரிக்கு உண்மையிலே அண்ணன் இருந்தால் என்ன செய்திருப்பானோ அது போல ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் என்னோட எண்ணமாக இருந்தது..

ஆனால் என்னால் முடிந்தது, அந்த சகோதரியின் videos என்கிட்டே பத்திரமா இருக்கு. எங்க ஊர்ல கால் பதிச்ச அவங்க நினைவுகள் இன்று எங்களுக்கு அவங்க நினைவாலயம்..

நான் என்னைக்கோ create பண்ண vedavakkam என்கிற facebook page இன்னைக்கு அவங்க நினைவுல அழுதுட்டு இருக்கு.

மற்ற மாணவிகளின் மனதை காப்பற்ற தன் உயிரையே மாய்த்து கொண்ட அந்த சகோதரியின் ஆத்மா & அவர் கடிதத்தில் வேண்டி இருப்பதை போல் அந்த கேடு கெட்ட பிறவி ஆசிரியர்-க்கு தகுந்த தண்டனை கிடைக்கட்டும்.


அன்பு சகோதரியே,
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.,


இப்படிக்கு,
உன் உடன் பிறவா சகோதரன்,
இராஜன் & வேடவாக்கம் கிராம பொது மக்கள்.

எழுதியவர் : இராஜன் (14-Oct-15, 10:28 am)
சேர்த்தது : Rajankhan
பார்வை : 271

மேலே