சினத்தில் சில வரிகள் - சந்தோஷ்

ஆடுது ஆடுது
தெருவோரம்
ஒரு கட்சிக் கொடிமரம்
அதன் கொள்கைகளைப்போலவே
ஆடுது.. தள்ளாடுது.

--
தேர்தல் வந்தால்
சின்னம் சின்னமாய்
காட்டுது கட்சிகள்
மக்களே என் மாக்களே
அது சின்னமல்ல சின்னமல்ல
..ஜனநாயகத்தின்.
அவமானச் சின்னங்கள்.

--

ஐநூறுக்கு உன் வாக்கு
விற்றது உன் தப்பு
அநீதி நடந்தாலும்
அதை நீ கேட்காதே
சோத்துல குறைச்சிப் போடு
கொஞ்சம் உப்பு.

---
ஊழல் சூறாவளியில்
லஞ்சப் பேரலையில்
ஐனநாயக மங்கையின்
மாராப்புச் சேலை
விலகுகிறது... நழுவுகிறது.
ஐய்யகோ.......
நீதித்தேவதையே... இன்னுமென்ன
உனக்கு கண்ணாமூச்சி ஆட்டம்...
கட்டவிழ்த்து
கட்டளைப்போடு
கெட்டவர்களின் நரம்புகளை கிள்ளி
தூக்கில் போடு...!

--

ஆக்ரோஷமாய் எழுதுவேன்
விருது ஒன்றும் வாங்கிடுவேன்.
புகழ் மாலை சுமப்பேன்.
நீதி தவறிய நாட்டில்
அநீதி நடந்திடும்போது
அறையினுள் பதுங்கி
தனிமை மெத்தையில்
கனவு தேவதையின்
கொங்கைக்கு கவிவர்ணம்
பூசிக்கொண்டிருப்பேன்.
ஏனெனில் நான் எழுத்தாளன்
எழுத்தாளன் மட்டுமே...!
போராளி.. கூட்டாளி
தீவிரவாதியும் கூட அல்லவே.



-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (14-Oct-15, 12:16 pm)
பார்வை : 97

மேலே