அருகே இருக்கும் அருகம்புல்லே

அருகே இருக்கும் அருகம்புல்லே ..

அருகம்புல்லே!
நீ அருகிலிருப்பதால்
உன் அருமை
எனக்கு தெரியவில்லை..
உனக்குள் இருக்கும்
மகத்துவம் என் அறிவிற்கு எட்ட வில்லை
மருத்துவ குணம் பற்றி
அறிய என் மனம் நாடவில்லை...

நீ ஏழை வீட்டு குடியில் பிறந்த
மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்கவில்லையா ? அல்லது ஏற்க மனம் வரவில்லையா ?

உன்னை பறித்து
அரைத்து வடித்து பருகினால்
உடலுக்கு நல்ல உயிர் ஊட்ட சத்து உண்டு
வெட்டுக்காயத்தை தடுக்கும் குணமுண்டு...

உன்னை அரைத்து தேனோடு ஏலக்காய்
சேர்த்து பருகினால் ரத்தம் சீராக்கி
உறுப்புகளை பாதுகாக்கும் படை
வீரன் அல்லவா நீ

நீ எங்கள் வீட்டுத் தோட்டத்து
இலவச மருத்துவமணி
உன்னை கவனி
என சொல்லும்
மருத்துவ மாமணிகள்
அடித்த மணிக்கு பின்னே...
நாயிற்கு தெரிந்த உன் அருமை இத்தனை நாள் ஏன் புரிய வில்லை
உன் வலிமை
அருமை ,நான் அறிந்தேன்.
உணர்ந்தேன்...

இனி உன்னை பயிறுடுவேன்.

வளர்ப்பேன்.
உனக்கும் என் மனதில்
இடம் தருவேன்.
உடலுக்கு வளம்
பலம் சேர்ப்பேன்...

எழுதியவர் : மை சூ பாண்டியன் (14-Oct-15, 12:29 pm)
பார்வை : 66

மேலே