தோல்வி - தோல்வி அல்ல- முயற்சி
தோல்வியை தோல்வியாக நினைத்தால்தானே அது தோல்வி
தோல்வியை வெற்றியாக நினைத்து நடத்து - நீ வேள்வி..!
கேள்வி கேட்பார்களே என்று ஆகிவிடாதே மூளி
கேள்வி கேட்பவர்கள் இருந்தால்தான் தோல்விக்கு ஜாலி..!
ஜாலியாய் தோல்வியை நீ எப்போதும் அனுபவி
கோலிபோல் உன் தோல்வி உருண்டோடுவதை கவனி..!
வேலி அமைத்தால்தான் வெள்ளாமைக்கு விரைவில் வளர்ச்சி
சாலி சூடானால்தான் வெள்ளாவிக்கு வெளுக்கின்ற கவர்ச்சி
தோல்வியை தூரஎறிந்து மீண்டும் மீண்டும் செய் நி பயிற்சி
வாகை உன்னை தேடிவரும்வரை தொடரட்டும் உன் முயற்சி.!