சிணுங்கள்

அவள்
பேசாமலும்
தோற்றுப் போகிறேன்....
பேசினாலும் தோற்றுப்
போகிறேன்......
யாரும் அறியாத
புது மொழியில்
மகிழ்ந்து போகிறேன்....
கொஞ்சும் மழலைக்கு
நானே அகராதி ஆகிறேன்....

வசந்தங்களை அள்ளி
தருகிறது விரல் பிடித்த நடைபயணம்

துன்பங்கள் தொலைந்து போகும்
உன்னை காணும் நொடி......

உன்னைக்கான நீ செய்யும்
சிணுங்கள் ஆயிரம்
குயிலின் அழகிய ராகம்......

எழுதியவர் : (14-Oct-15, 10:35 am)
பார்வை : 88

மேலே