அன்புள்ள இறைவா
அன்புள்ள இறைவா!!
நான் பிறக்கும் போது
சிரித்திட சிரமப்பட்டாலும்
என் சிறு முகம் பார்த்ததும் சிரித்தாளே!!
நடக்க பயுலும் போது
என் கைவிட மனமின்றி
பொய்யென கைவிட்டாரே!!
உன்ன மறுத்தாலும்
கோபம் இல்லா திட்டலும்!!
என் முதல் பேச்சை கேட்டதும்
ஆனந்தம் கொண்டாளே!!
பார்போருக்கெல்லாம் இதை
சொல்லிச் சொல்லி பெருமை கொண்டாளே!!
படிக்க அறியாது விளையாட்டு
பொம்மை போல் புத்தகம் ஏந்திப் பார்ப்பதை
பார்த்து பார்த்து ரசித்தார்களே!!
பள்ளி செல்லும் பருவம் வந்ததும்
அனுப்ப மனமின்றி அனுப்பி விட்டு!!
பின் பள்ளிக்கும் வந்து
என் விளையாட்டையும்! என் பாட்டையும்!
மறைந்து நின்று ரசித்தார்களே!!
பள்ளி நேரம் முடிவதற்குள் வந்து
கால்வலித்தாளும் காத்திருந்து தூக்கிச் சென்றாரே!!
சிறிது தூரப்பயனம் என்றாலும்
தன் கால் வலி பொறுத்து தூக்கிச் சென்றார்களே!!
எத்துனை குழந்தைகள் இருந்தாலும்
தன் பிள்ளை போல் இல்லை என்று
சொல்லாது சொல்லி பெருமிதம் கொண்டார்களே!!
பள்ளிகள் சொல்லாத
வாழ்கை கல்வியை உணர்த்தினார்கள்!!
தனக்கு என்ன ஆனாலும்
எனக்காக மட்டுமே வாழ்ந்தாரே!!
பண்டிகை வந்தால் தனக்கென்று யோசிக்காது
எனக்கென புத்தாடை!இனிப்பென!
கேட்கும் முன் சேமிப்பை உடைத்து
செலவு செய்தாரே!!
பக்குவம் வரும் போது
துரம் நின்று ரசித்தாரே!!
இத்துணை சிறப்புகளும் தவம் இன்றி கிடைத்த
என் தாய் போல் எவரும் இல்லை
என் தந்தை போல் யாரும் இல்லை
இறைவா வரம் கொடு!!
என் தாய் தந்தை என்றும் நலமுடன் வாழ...