உதவாத தனயனாய்

நீல நயனமாய் ஒளிர்கின்றாய்...
நெஞ்சில் சலனத்தை விதைக்கின்றாய்

அன்பென்ற வார்த்தையின் மேலே..
அமர்ந்து அருட்செயும் தாயே.. !

நீரின்றி நிலம் வாழ்ந்தாலும்..
நிலமின்றி நீர்வாழுமோ -இங்கே !
நீயின்றி நான் வாழ்வதோ...

அடித்தாலும் பழித்தாலும் உன்மடியன்றி..
வேறேதும் உலகென்று எனக்காகுமா..?

தாயுனக்கு உதவாத தனயனாய் -நானும்..
நினைவின்றி வாழ்ந்தாலும்..
நீயின்றி வாழ்வேனோ....

(உங்கள் அம்மா 'அ ' பிடித்த பெண் தெய்வத்தை மனதில் நினைத்து மீண்டும் ஒருமுறை படித்து பாருங்களேன்.. )

எழுதியவர் : (15-Oct-15, 12:54 pm)
பார்வை : 199

மேலே