அவன் வருவானா

பனி படர்ந்த விடியல் நேரம்..
பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாய்
விதம் விதமான மனிதர்களை
இறக்கி விட்டு போகும் காலை..
தேநீர் அருந்தியபடி ..
தினசரி படித்தபடி..
வாயைத் திறந்து பேசும் போது..
பனிப்புகை விட்டபடி..
பலரும் ..குளிரில்..
இன்றாவது வருவானா
என்று ஏங்கியபடி..
ஏழைத் தாய் ஒருத்தி..
மகனுக்காக..
ஒவ்வொரு பேருந்தையும் பார்த்தபடி..!
என்னம்மா ..என்று
கேட்டபோது சொன்னாள்..
மகன் வரப் போகிறான் என்று..!
******
சொல்லாதது..
மனைவியின் பின்னால்
தனிக்குடித்தனம் செய்ய
போன வாரம் போனது ..!
******
இது
கேட்டவருக்கு தெரியாது..!

எழுதியவர் : கருணா (15-Oct-15, 8:00 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 477

மேலே