மோகன புன்னகை 5
ஒரு விஷயம் மீராவிற்கு நன்கு புரிந்துவிட்டது. கிருஷ்ணா அவளை பார்க்க தான் வந்திருந்தான் என்று.மறுபடியும் செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரி திறந்திருந்தது. மீரா விடுமுறையின் எல்லா நாட்களிலும் கிருஷ்ணாவை பார்த்திருந்தாள். அவள் வீட்டருகே , அவள் கணினி வகுப்பு செல்லும்போது என எல்லா இடங்களிலும் அவன் நின்டிருந்தன். எதிர்பாரத சந்திப்புகளை எதிர்பார்த்திருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போதெலாம் அவன் புன்னகையே முதலில் ஆரம்பிக்கும்.
அன்று மீராவின் கல்லூரியின் விழா. அவள் மெரூன் நிற காட்டன் பட்டு சேலையில் வந்திருந்தாள். கிருஷ்ணாவிற்கு அவன் கண்களை அவளில் இருந்து திருப்ப முடியவில்லை. அவன் அவளை ரசிப்பதை அனைவருமே பார்த்திருந்தனர். அவளை பார்த்தவரே சென்று அருகில் இருந்த கம்பியில் தலையை முட்டி கொண்டான். அதை கண்ட அனைவருமே சிரித்தனர். வெக்கபட்டவனை திரும்பி அமர்ந்தான். மீரா உற்சாகத்தின் நுனியில் இருந்தால். அவள் ரசிக்கும் ஒருவன் அவளை ரசிப்பதை அவளால் என்னவென்று புரியவைக்க முடியாத நிலையில் இருந்தது.
இதெல்லாம் கவனித்து கொண்டிருந்த கார்த்திகா 2,3 நாட்கள் களைத்து வந்து ஹே உனக்கு ஒரு ப்ரோபோசல் வந்துருக்கு. இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டுடென்ட். என்ன என்றவரே கூறினாள். அது கிருஷ்ணாவாக இருக்கும் என்ற எண்ணத்தில் எனக்கு ஓகே தான் என்றவள் யாரென்று விசாரிக்கவில்லை.
எனக்கு அன்னைக்கே இது தெரியும் என்றாள் கார்த்திகா. சிரித்து கொண்டிருந்தார்கள். மீராவின் தோழி அனு கார்த்திகாவிடம் கிருஷ்ணா அண்ணா போன் நம்பர் என்ன என்று கேட்டாள். வீட்ல மொபைல் ல சேவ் பண்ணிருக்கேன். நாளைக்கு சொல்றேன் என்றாள். ஆனால் அனு ஒரு 10 இலக நம்பர் சொல்லி இதன் அவங்க நம்பர் அஹனு பாத்து சொல்லுங்க என்றாள். அடுத்த நாள் கார்த்திகா கிருஷ்ணாவிடம் மீராவின் மொபைல் நம்பர் குடுதிருந்தாள். மீராவிடம் கிருஷ்ணா நம்பர்.
மாலை வீட்டுக்கு போனதுமே மொபைல் இல் மெசேஜ் வந்திருப்பது எடுத்து பார்த்தாள்.
ஹாய் மீரா திஸ் இஸ் கிருஷ்ணா என்று இருந்தது அந்த மெசேஜ்.
அதற்கு பதில் அனுப்ப யோசித்து கொண்டே ஒரு மணி நேரம் போயிருந்தது.
அடுத்த மெச்சகெஉம் வந்தது சாரி மீரா உனக்கு என்னோட பேச விருப்பம் இல்லைன்னு நேனைக்றேன். சாரி என்று அனுபிருந்தன்.
அடுத்த செகண்ட் மெசேஜ் டைப் செய்ய ஆரம்பித்து விட்டாள் மீரா. இல்ல கிருஷ்ணா நான் இப்போ தான் மொபைல் பார்த்தேன். ஹொவ் ர் யு? என்று அனுப்பிவிட்டால்.
மீண்டும் மெசேஜ், நான் நல்ல இருக்கேன் நீ?
சாப்டியா?
உரிமையான கேள்விகள் ஆரம்பித்திருந்தன அவன் அலைபேசியில் அவளும் அந்த உரிமையை எடுத்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். நாட்கள் அப்டி நகர இருவருக்கும் ரகசியமே இல்லை என்ற அளவுக்கு அவர்களது பழக்கம் வளர்ந்திருந்தது.
கிருஷ்ணா வின் சார்பாக கார்த்தி காதல் சம்மதம் கேட்டதை கிருஷ்ணா அறிந்திருக்கவில்லை. மீரா கிருஷ்ணா வின் காதலை ஏற்றுகொண்டதாக நினைத்து அவனுடன் பழகி கொண்டிருந்தாள்.