கம்மல் ஜிமிக்கி காதல்
காது மடல்களை தொட்டதற்கா கோலாகலம்
கம்மல் ஜிமிக்கிகளே ஏன் இந்த ஆரவாரம்
கற்கண்டு பாகாய் மாலை வெயிலில் ஜொலிக்கும்
கழுத்து மடிப்பு வியர்வைதான் இவள் அரிதாரம்
கண்ணாடி வளைகள் மணிக்கட்டில் மீட்டும் நாதம்
கர்நாடக இசையா ஹிந்துஸ்த்தானியா வீண் விவாதம்
கால் கொலுசுகளில் சிறுமணிகள் சிணுங்கும் சத்தம்
கேலி பேசி என்னை செய்யும் ஏளனம் எகத்தாளம்
ஒரு பொழுது அடக்கம் மறு பொழுது ஆர்பரிக்கும்
உன் அழகிற்கு என்ன தகும் கேள் அச்சாரம்
பகலில் நிழலாய் இருக்கிறேன் pani செய்கிறேன்
இரவில் இருளாய் கலக்கிறேன் வரம் வேண்டும் ...