இது காதல் கவிதை

வெற்றிடங்களை
நிரப்பிவிடுவதே காற்றின் வேலையத்த வேலை.!

சுவாசிக்கவிரும்பாதவனின்
நாசிக்குள் என்ன வேலை.?

காகிதம் கிடைத்தால்போதும்
உடனே சிநேகம் கொண்டுவிடும்..!

சாக்கடையோ
பூக்கடையோ
எதையும் பார்ப்பதில்லை.!

மதநூலின் பக்கங்ளைக்கூட
காற்று போகிறபோக்கில் புரட்டிவிட்டு போகிறது.

காற்று கண்ணுக்குத்தெரியும்..
புயல் சேதங்களைப்பாருங்கள்..

காற்றை அடைத்தது பிஞ்சுவிரல் பலூனில்..
பரவாயில்லை அது அன்புக்கு கட்டுப்படுகிறது.!

பூவைக்காட்டிக்கொடுக்கும் வண்டிடம்.!
எச்சரிக்கை இது காற்று உலவும் இடம்.!


காற்று செய்வதை எல்லாம் இந்த காதலும் செய்கிறது.!

எழுதியவர் : வசந்த நிலா (16-Oct-15, 7:00 pm)
பார்வை : 207

மேலே