பாக்கள் -----------முஹம்மத் ஸர்பான்

நாட்காட்டியில் ஒரு நாழிகை
மலர்வதற்காய் நொடிக்கு நொடி
மனிதனின் சுவாசங்கள் கல்லறைக்கு
இரையாகிக் கொண்டிருக்கின்றன.
***
கருவிலிருந்து மார்பில் புரளாமல்
தெருவில் தவழ்ந்து நடை பழகும் சேய்க்கு
தாய்ப்பால் இனிப்பு தெரியாததால்
இறக்கும் வரை தண்ணீரும் கசக்கிறது.
***

மழலைப்பள்ளியில் கள்ளிப்பால்
பருகியும் மூர்ச்சையாகதவன்
வாழும் வரை சகுனியாகிறான்
இறந்த பின் பாவியாகிறான்.
***

மண்ணையும் விண்ணையும்
காகிதமாக்கி கடவுள் வரைந்த
உயிரோட்டமான சித்திரங்கள்
சுவாசிக்கும் மனிதர்கள்.
***

உலகம் பிறந்ததிலிருந்து
நடந்தோடி மரணிக்கும் வரையில்
மனிதனை அணுயணுவாய்
கொல்கிறது முதாளித்துவம்.
***

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (16-Oct-15, 7:18 pm)
பார்வை : 157

மேலே