திண்ணை வீடு
என் திண்ணை வீட்டின்
தென்னங் கீற்றின்
துவாரங்கள் தான்
நிலவை ஆராய்ந்த
என் தொலைநோக்கி
கீற்றின் சந்து வழியே
வந்து விழுந்த
நிலவொளிதான்
என் வீட்டு சினிமா
அந்த ஒளியில் விரலாட்டி
வித்தை செய்வதால்
நானே கலைஞன்
நானே இரசிகன்
நானே தயாரிப்பாளன்
அதை இன்று விஞ்ஞானம்
எனும் சூறைக்காற்று
சுருட்டி கொண்டு போய்விட்டது
அந்த நிஜ உலகத்தை
மகிழ்ச்சியை விஞ்ஞானத்திடம்
விற்று விட்டு
இன்று விஞ்ஞானத்திலே
அதை தேடி கொண்டு
இருக்கிறோம்..