நீர்த்துபோகாமல் நீர்த்துபோனதடி
நீர்த்துபோகா உன் நினைவுகளால்,
நீர்த்துபோனதடி... என் கண்கள்...
நீ பார்த்து போன நொடிகளில்...
நான் வேர்த்து போன தருணங்களை...
சேர்த்துவைத்துக்கொண்டதடி... என் நெஞ்சம்...
உலகையே அமைதியாக்கும்...
உன் வார்த்தைகளின்றி...
ஊனமானதடி என் செவிகள்...
உறையவைக்கும் உன் பார்வை படாமல்...
உருகுதடி எந்தன் தேகம்...
சிறையெடுக்கும் உன் சிரிப்பு இல்லாமல்... சிறகடிக்குதே என் சோகம்...

