இரவு

வானம் மேகக்கண்ணை மூடி
தூக்கங்காணும் காலம்!

வர்ணங்கள் சாயம் போக கறுப்பு
வண்ணம் நிறைந்த கோலம்!!

மனித சப்தம் உடைத்து ரகசியம்
திறக்கும் ரகசிய காலம்!!

சில மலர்களை தத்தெடுக்கும்
தாயின் மடி!!

சில உயிரினங்களுக்கு கண் கொடுக்கும் தாயின் பாசம்!!

பகலின் கல்லறை!

நிலவின் பிறந்த நாள்!

நிலவுமாணவனைஒரு நாள் அமாவாசை எடுக்கச்சொல்லும் அற்புத ஆசிரியர்!

தன் நட்சத்திர பேத்திகளை
நமக்கு காட்டும் பாசத்தின் அடையாளம்!

அதை பார்க்காமல் உறங்கும்
ஜீவனை கோபித்து எங்கோ ஒளிந்த
வேதனை தாய்!

கற்பனைனைய விரிக்க
சரியான நேரம்!

கலவியும் கொள்ள ஏத்தகாலம்!

தன் கதிரவன் நண்பன் இறந்ததால்
நெஞ்சில் கறுப்புசீலை உடுத்திய சோகம்!

தினமும் கறுப்பு சீலையே உடுத்தும்
வேதனை காலம்!

ஜீவன்கள் ஓய்வ எடுக்க வந்த
ஓய்வுக்கூடம்!

தூக்கம் என்ற தேசியசொல்லை
மனிதர்கள் சொல்லும் பழைய மாடம்

தினமும் ரகசியத்தை சொல்லும்
பள்ளிக்கூடம்!

தன் நண்பன் கையால் இறந்தே போகும் நட்பின் உச்சம்!!!!

எழுதியவர் : (17-Oct-15, 5:48 am)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : iravu
பார்வை : 65

மேலே