தனிமையில் தள்ளாடும் நினைவுகள்
கண்கள் எனக்காக தூங்கிய நாட்கள் சென்றது...
அதற்காக இப்பொழுது உறங்க
பழகி கொள்கிறது..
புன்னகை பூத்து குலுங்கிய
நாட்கள் சென்றது ...
கண்ணீர் கூட செல்ல வழில்லாமல் ,
கண்களில் மிதந்துகொள்கிறது....
வாழ்கையை அழகாய் எதிர்கொள்ளநினைத்தேன்...
எதிரில் கூட நிற்கமுடியாமல்
பின்னோக்கி செல்லும் ஒரு வாழ்கை...
அசட்டு சிரிப்புகளில் மெய் சிலிர்த்த உதடுகள்..
அசைவின்றி கிடக்கும் பூக்களாய் சுருங்கியது ....
என்னை பிரதிபளிக்கும் , ஓர் கண்ணாடியில் தினமும் பார்த்த , என் கண்களுக்கு..
பிம்பங்கள் கூட காண முடியாமல் ,பார்வையற்று கிடக்கிறது....
இத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு,,
உயிர் பிரிந்த உன் இதயத்தை,,
உயிர் பிரிந்த என் உடலில் , வைத்து வாழ பழகிகொள்கிறேன்..
முருகன்..