என்னடா செய்தாய் எனக்கு
நீ கனல் என்று தெரியாமல் உனக்குள்ளே விழுந்து விட்டேன்.
அனலாக எரித்து என்னை அனுஅனுவாய் சிதைத்துவிட்டாய்.
நடமாடும் பிணமாக்கினாய்.
வலிசொல்லால் எனைதாக்கினாய்.
உனைபிரிந்து இருக்க முடியாதென்றாய்.
ஏதேதோபேசி என்னுள்ளே நுழைந்தாய்.எனக்குள்ளே நீயாகி உயிரினில் கலந்தாய்.
உள்ளுக்குள் ஆசைகளை திரையிட்டு மறைத்தேன்.
ஒவ்ஒரு நொடியிலும் உனை என்னில் விதைத்தேன்.
காதல் சுகங்களை உன்னிடமே கற்றேன்.
வலியின் வேதனைகளை உன்னாலே பெற்றேன்.
உனக்குள் இருப்பது எனக்கு தெரியவில்லை.
எனக்குள் இருப்பது உனக்கு புரியவில்லை.
ஆனாலும் உனையே உயிர் என நேசிக்கிறேன்.உன் நினைவை தானே நாளும் சுவாசிக்கிறேன் ..