”திரு”மணம்

“திரு”மணம் ஆனதால்
“திரு”வாளர் “திரு”மதி பட்டமா?
“திரு”மணத்திற்க்கு பின்பு
”திரு””திரு”வென முழிப்பதால்
இந்த தலைப்பா ..?
ஒருவேளை வாலிப பருவத்தில்
“திரு”டிய பார்வைக்காக
”திரு”ந்துவதற்க்காக பெரியோர்களால் சூடப்படும் மகுடமா..? இல்லை
”திரு”டல்களின் நெருடல்களால் மலரும் நினைவுகளா.....?
இப்படியும் இருக்கலாம்.
“திரு”ப்பம் தான் வாழ்க்கை என்று சுட்டி காட்டவா...?
“திரு” “திரு” என்று விழிக்காதீர்கள்
“திரு”மறையாம்
“திரு”க்குர் ஆனை
”திரு”ப்பி “திரு”ப்பி பார்.
”திரு”ம்ப “திரு”ம்ப ஓதிக் கொள்.
“திரு”ப்தி தான் உன் வாழ்க்கை எப்போதும்....
“திரு”வாய் மலர்ந்தது
“திரு”த்தூதர் அல்லவா......?