சுட்ட வடு
கூர்மையான வார்த்தைகளால்
காயப்படுத்தி
கண்கள் கலங்கிட
வைத்திருக்கிறேன்
உன்னை ....
காயங்களை
மறைத்தும்
மனதார மறந்தும்
காதலோடே இருக்கிறாய்
எப்பொழுதும் போல.....
காயத்தின்
வலியை
உன் காதலில்
உணர்ந்து
குற்ற உணர்வுகளால்
காயம்பட்டு
கிடக்கிறேன்
நானும்...
நாவினால் சுட்டவடு
சுட்டவர்க்கும்
ஆறாது துன்பப்படுத்துவது
காதலில் மட்டுமே
சாத்தியம் .....