எங்கோ பெய்த மழை

எங்கோ பெய்யும் மழை
எனக்காக அனுப்பி வைக்கிறது
சில்லிடும் காற்றில்
சிலிர்ப்பூட்டும் தன் வாசத்தை ...

ஆழ்ந்து மூச்சிழுத்து
அனுபவித்து கிடக்கிறேன்
எங்கோ எனக்காக
பெய்யும் மழையை....

எழுதியவர் : வீரா பாலு (19-Oct-15, 11:54 am)
சேர்த்தது : வீரா பாலு
Tanglish : yengo peitha mazhai
பார்வை : 107

மேலே