ஆசை நாயகி

எதிலும் நீ இருப்பதை உணர
உள்ளம் உண்மை மொழிகிறது
ரசிக்கும் விம்பம் வேராக இருக்க
கண்கள் பொய் பேசுகிறது
ஆனால் நான் சுவாசிக்கும் நேசிக்கும்
உயிரான மெய் உருவாக நீ இருக்கிறாய்..

உள்ளம் குமுறுகிறது
ஓடி வந்து உன் மடியில் தலை சாய்க்க
உண்ணும் உணவில் ஒரு கவளம் கேட்க
உன் கையால் உண்டு உன் கைவிரல் சுவைக்க
தேடி வந்து தோள் கேட்டுரங்க
ஆசையின் அளவில் குறைவின்றி போகிறது
ஆசைகளை மௌனங்களால் அலங்கரித்து
தினம் உன்னை மனதால் பூஜிக்கிறேன்...

எழுதியவர் : பர்ஷான் (19-Oct-15, 8:59 pm)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : aasai naayaki
பார்வை : 292

மேலே