சின்னக் குருவி பார்

சின்னச்சின்ன குருவி பார்
சிங்காரக் குருவி பார்
சின்ன சின்ன அலகினால்
பெரிய கூட்டைக் கட்டுதே...!

வைக்கோல் ஓலை நார் கொண்டு
முயற்சியுடன் பின்னுதே
வசதி மிக்க வீட்டைப்போல்
வடிவமைத்துப் பின்னுதே...!

அற்புதமாய் கூட்டுக்குள்
அறைகள் தன்னை அமைக்குதே
குடும்பமாக உறங்கிட
பஞ்சுப் படுக்கை செய்யுதே...!

காற்றினிலே ஊஞ்சல்போல்
ஆடுகின்ற கூட்டைப் பார்
ஊஞ்சலாடும் கூட்டிலே
கூடிக்களிக்கும் குருவி பார்..!

நாமும் அந்தக் குருவி போல்
முயன்றால் எதையும் படைக்கலாம்..!
உருவம் சிறிது என்றாலும்
அதன் முயற்சி உனக்குப் பாடம்தான்...!..!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (19-Oct-15, 10:55 pm)
Tanglish : chinnak kuruvi paar
பார்வை : 1845

மேலே