தமிழன்னை
பாரதி தாலாட்டிய பாமகள்
பாரதத் தாயின் பெருமை அவள்
பசுமை மாறா சோலை அவள்
என்றும் வற்றா ஜீவ நதி அவள்
அள்ள அள்ள குறையாத ஊற்று அவள்
அழிவில்லா திவ்ய சக்தி அவள்
ஆதிசிவன் அடி எடுத்து பாடிய
தனிச் சிறப்பு பெற்றவள் அவள்
நெடுந் தொன்மை வாய்ந்த கோமகள்
அவள் தான் தமிழ் அன்னை எனும் நம் திருமகள்!!!