தூய்மை அரசியல்வாதி

திருடர்களின் மாநாடு

திருடன் 1: தலைவா... ஏதாவது புதுசா செய்யணும்னு தோணுது... இப்பெல்லாம் நம்ம பத்தி யாருமே பேச மாட்டீங்கறாங்க...

திருடன் 2: நீ சொல்லறதும் சரிதான்.... நம்ம விட பெரிய திருடர்களா அரசியல்வாதிகள் மாறீக்கிட்டு இருங்காங்க...

தலைவன்: சரி! நம்ம பத்தி எல்லாத்துக்கும் எடுத்துச்சொல்ல யாராவது ஏதாவது ஒரு திட்டம் சொல்லுங்க பார்க்கலாம்....

கூட்டமே பலமாக யோசிக்கிறது....

பல மணி நேர யோசனைக்கு பின்....

திருடன் 1: தலைவா! இப்ப நம்ம பிரதமர் "தூய்மை இந்தியா"னு ஒரு திட்டத்தை கொண்டுவந்துருக்காரு... அதே போல..

தலைவன்: டே என்னடா சொல்ற... நாம ஏண்டா தெருத்தெருவா போய் சுத்தம் பண்ணனும்..

திருடன் 1: தலைவரே.. சொல்றது முழுசா கேளுங்க... நம்ம திட்டத்தோட பேரு... "தூய்மை அரசியல்வாதி".. நாம ஒவ்வொரு அரசியல்வாதியா தேர்ந்தெடுக்கிறோம்... அவங்க வீட்ட சுத்தமா கொள்ளை அடிக்கிறோம்.. ஒன்னு கூட விடாம.. இது எப்படி இருக்கு....

தலைவன்: யோசனை நல்லாத்தான் இருக்கு... சரி இன்னேலேயிருந்து நாம் இத செயல்படுத்தலாம்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Oct-15, 10:18 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 179

மேலே