திருமண நாள்

திருமண நாள் வாழ்த்து
_______________________
பெண்ணே !! உன் முகத்தில் பெருமிதம் கண்டேன்..
உன் துணை நிற்பவர் கை கொடுதததாலோ ???
உன் அழகின் மெருகு கூடியது
சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பாங்கோ ??
சிட்டுக்குருவியாய் பறந்தாய் அன்று
சித்திரமாய் குடும்பத்தை காக்கின்றாய் இன்று
திருமணம் முடிந்து 27 ஆண்டுகள் ஆனாலும்
இருமனமும் இன்றும் இளமையை தழுவி நிற்க
உன் மனம் போல் வாழ்க்கை அமைந்தது
உன் மனம் போல் பெருகட்டும் இன்பம்...
உன் அன்பு தோழி .....
மைதிலி ராம்ஜி