காக்கும் கடவுள்
தொழில் செய்யும் கருவியை துடைத்தெடுத்து
காய்ந்த கறைகளை கவனமாய்க் கழுவி
பூவோடு சந்தன பொட்டுமிட்டு
பொறுப்பாய் தொட்டு கும்பிட்டு
பக்தனவன் கேட்கிறான்
தொழில் சிறக்க அருள் புரிவாயென
ஆம்...
உயிர்களை காக்கும் அந்தக் கடவுள்
அருள் புரியலாம் ஆயுத பூஜையன்று
"கசாப்புக் கடை கத்திக்கு"