ரசிக்கிறேன் நான்
அடைமழைக்கு பின்னர்
அந்தி வெயிலின்
பொன்னிற வெளிச்சத்தில்
ஒரு சில நிமிடங்கள் தோன்றி
ஓராயிரம் அழகு சேர்க்கும்
வானவில்லைபோல..
அடிக்கடி நீ என்மீது கொள்ளும்
நட்பு கலந்த கோபத்தையும்
சிலிர்க்க வைக்கும் சண்டைகளையும்
நான் ரசிக்கிறேன் நண்பா..!