அம்மாவின் கனவு நனவாகுமா

அம்மாவின் கனவு நனவாகுமா?
============================
அம்மா அன்புடன் அழைத்தார்
அருகில் சென்று அமர்ந்தேன்
ஆதரவாய் கரம் பற்றினார்
அவர் மடியில் மீண்டும் நான்
அகம் குழைந்து சேயானேன். !

ஆடி கடந்ததப்பா என்மகனே
ஆவணியும் பிறந்ததப்பா தங்கமே
ஆர்வமுடன் உன்னை ஆதரிக்க
அகம் நுழைந்த மங்கை நல்லாள்
ஆரோ அவள் யாரோ! நீ சொல்வாய்!

அணங்கு அவளை என்கண் பார்க்க
அழைத்து வருவேன் என்றாயே
அக்கறை இழந்தாயோ ஓய்வில்லா
அலுவலால் மறந்தாயோ!செல்வமே!

அம்மாவின் வார்த்தைகளென்
அகத்துணர்வை தூண்டியதே
அவள் உருவம் மனக்கண்ணிலாட
அவள் நினைவோ என்னிலாட
அவளை வாசிக்கத் துவங்கினேன்!

அவள் பாடிவரும் பால் நிலா
அனுதினம் நான் தேடிய தேன் நிலா
அகம் குளிரூட்டும் தண் நிலா
அழகில் நிகரிலா வெண் நிலா!

அவள் சிரிப்போ முகிழாத முல்லை
அவள் அன்புக்கு ஏது எல்லை
அவள் உள்ளம் மல்லிகை வெள்ளை
அடித்தாள் என்மனதைக் கொள்ளை!

நெஞ்சில் வளர்த்தக் காதலை
நேரில் சொல்லத் துணிவில்லை
நேரம் இப்ப நல்லா இருக்கு ஆனால்
நேரிழை மனமோ கல்லா இருக்கு !

நெஞ்சுக்குள்ள கூடுகட்டி
நேசத்தோடு வாழ்ந்து காட்ட
பூங்காற்று விரும்புமா நாளை
என் கூட்டுக்கு திரும்புமா!

பூங்காற்று விழிக்குமாஎன்பாட்டை
ரசிக்குமா ?
பூங்காற்று தழுவுமா என் மனசு
சிரிக்குமா ?
பூங்காற்று விரும்புமா என்வாழ்க்கை
கிடைக்குமா?
அம்மாவின் கனவும் நனவாகுமா?

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (23-Oct-15, 6:36 am)
பார்வை : 130

மேலே