எரை கட்டி
ஏரைதான் கட்டிக்கிட்டு
ஏர் ஓட்ட போறியாடா
காத்திருக்கும் கன்னியவள்
நானும் துணைக்கு ழரட்டுமாடா
காட்டாற்று ஓரத்திலே
காத்திருக்கேன் வர்றியாடா
காட்டாற்று தண்ணியிலே
அயிரை மீனை பிடிச்சிடதான்
தாவணியை அவுத்து தர்றேன்
என் முன்கனியை பாக்காம
ஆற்றிலேதான் ம பாருமேடா
கல்லு கூட்டி அடுப்பு மூட்டி
அயிரை மீனை சுட்டு தர்றேன்
ஆசைதீர தின்னுபுட்டு
என் மடியில் வாருமேடா
மரத்திலேதான் கிளையிருக்கு
குச்சியிலே தேன் இருக்கு
தேனை பறிச்சி எனக்கு கொடு
என் உதட்டை நான் கொடுப்பேன்
நம் அமர்ந்திருக்கும் ஓரமெல்லாம்
அயிரை மீனு வாசமடா
நம் சேர்ந்திருக்கும் ஓரமெல்லாம்
வியர்வை பூவின் வாசமடா