வாரிசு சினிமா

சிவாஜியின் படத்துக்கு
கைதட்டிய ரசிகர்களின் பேரன்கள்
விக்ரம் பிரபுவிற்கு
விசில் அடிக்கிறார்கள்

பாலுக்கு அழும் குழந்தை
இருக்கும் வீட்டில் இருந்துதான்
வருகிறான்..
கட்டவ்ட்டுக்கு பால் அபிஷேகம்
செய்யும் ஏதோவொரு ரசிகன்.

விசில் அடிக்கும்
ரசிகன் தரைடிக்கட் வாங்குவதாலே
விக்ரம் பிரபுக்கள்
ஜாக்குவார் வாங்குகிறார்கள்.!

வாழ்க ஜனநாயகம்!

எழுதியவர் : வசந்த நிலா (23-Oct-15, 11:52 am)
Tanglish : varisu sinimaa
பார்வை : 210

மேலே