காலம்
பயணித்தது
காகிதக்கப்பல்..
கடல் சேரும் கனவோடு..!
அது நதியின் மேல் பயணிக்கையில்
கைதட்டல்களை சுமந்து அசைந்தது.!
பிறிதொரு அலையில் நதியினுள் கவிழ..
மூழ்கிய கப்பலை மூடிவிட்டு..
சலனமற்று நகர்ந்தது நதி.!
கைதட்டியவர்களும்
வேறொரு கப்பலேற..
நதிக்குள்ளே உறங்கியது
காகிதக்கப்பல்
கடல் கனவு காணும் இன்னும்
சில காகிதங்களோடே..!