குற்றம் கடிதல்
எனக்கு ஒன்றுமே தெரியாது..
நான் குற்றமில்லாதவன்..
என்பதையே சைகைகளால்
அந்த பேச முடியாதவன் பிதற்றிக் கொண்டிருந்தான்..
சிறைக் கம்பிகளின் பின்னால் ..
..
சிரித்தபடியே..
அந்த கொடூரர்கள்
விருந்து ஒன்றில் ..
வீணாய்ப் போனவன் ஒருவனை
போதையாக்கி ..அவன் கையில்
கொள்ளிக் கட்டை செருகி
மாட்டிவிட்டதை ..எண்ணி எண்ணி..
சிரித்தபடியே..
அந்த கொடூரர்கள் !
..
கீழ் சாதி குழந்தைகளை
கொடும்பாவி கொளுத்தி விட்ட
பணியோடு முடியவில்லையாம் ..
அவர்களின் வேலை..
..
நாட்டில் நல்லோருக்கு ,
மிச்சமிருக்கும் நல்ல பேரையும்
எரித்து பொசுக்குவதும் தானாம் ..
ஆனால் இது அவர்களுக்கு
தெரியவில்லை !
..
தூரத்தில்..
ஓரத்தில்..
சோரத்தில்..
நீதி!