இடியான மின்னல்

மின்னல் தாக்கிவிடக் கூடுமென்று
என் வீட்டுச் சன்னலை
திறக்கின்ற போதெல்லாம்
கைபேசியை இயக்க நிறுத்தம்
செய்து விடும் நான் பாதுகாப்புக்காக
இடிதாங்கியும் நிறுவியிருக்கலாமென்று
அங்கலாய்க்கிறேன் ....
திசைமாறிப்போன உன் மின்னல்
எனக்கு இடியானதில்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Oct-15, 4:27 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 94

மேலே