காதலிக்கதெரியாத உள்ளம்

காதல் மலர் போல் ....
காலையில் அழகாய் ....
மாலையில் வாடிவிடும் ....
என்றாலும் காதல் ...
அழகும் மென்மையும் ....!!!

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
நீ உள்ளூர் மயானத்தில் ...
நான் வெளியூர் மயானத்தில் ....!!!

உன்னைப்போல் காதலிக்க ...
தெரியாத உள்ளமும் ஒரு ....
அங்கவீனம் தான் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 875

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (25-Oct-15, 4:26 am)
பார்வை : 641

மேலே