இராசராசனே                  ஆளவா எங்களை                  மீண்டும் ஆள வா 

சதய விழா காணும் இராசராசனே
மீட்டு ஆள வா எங்களை
"மீண்டும் ஆள வா"
==================

உலக மாந்தர் அறியாமை நீக்கும்
உள்ளத்தில் உதிக்கும் ஞான ஒளிபோல
அகிலத்தில் தமிழர்கள் அவலம்நீங்கிட
அரியனை அமர்ந்தான்அருண்மொழி !

தொட்டது துலங்கும் பொற்கரங்கள்
--- மக்கள்
துவளாது ஆளும் கொடைத் திறங்கள்
திக்கெட்டும் பரவும் புகழ் கிரணங்கள்
சரித்திரம் ஏறின அவன் பொற்காலங்கள்!

அவன் வீரத்தில் ஏறு விவேகத்தில்மேரு
மெய்க்கீர்த்தி அவன் வீரத்தைப் பகரும்
மேலான நிர்வாகம் அறிவுத்திறம் புகலும்
கேரளாந்தகன், சிங்களாந்தகன்
தெலிங் குல காலன் வெற்றிப் பட்டங்கள்
ஆட்சி எல்லைக்குக் கட்டியம் கூறும்

ஆட்சி முறை, ராணுவம்,நுண்கலை,தமிழ்
இலக்கியம் பெற்றன போற்றும் எழுச்சி -
உருவம் உயிரோவியம் வயதோஆயிரம்
பெரிய கோவில் உலகில் நிகரில்லா ஏறு
தமிழர் கட்டடக் கலைத் திறனுக்கு மேரு
தழைத்த அறிவியல் பொறியியல் சான்று

(*தாளாண்மையும் வேளாண்மையும்
தழைத்து ஆனைகட்டிப் போரடித்து
சோழவளநாடு சோறுடைத்து என
சோபித்திருந்த காலம் மாறியதே!

குடிமைப் பொருள் குண்டு அரிசி தின்று
குடி வெறி கொண்டு "டாஸ்மாக்" சென்று
குலப்பெருமை இழந்து இலவசங்களுக்கு ஏங்கும்"
நாம் தமிழர்" தாளாண்மையிலும் தகைமை இழந்தாரே!)*

'சதய தினத்தில் பிறந்து சாதனைப்புரிந்து
சதய விழா காணும் இராசராசனை
அன்போடு அழைப்பேன்"சனநாதனே
மும்முடிச் சோழனே!சிவபாத சேகரனே!

சரித்திரம் பேசு ம் உன் பொற்காலம்
தரணியில் மீண்டும் மலர்ந்திட
தாளாண்மையும் வேளாண்மையும்
தழைத்து தமிழர்கள் தலை நிமிர்ந்திட
எங்களை சிறை மீட்டு ஆள வா
எங்களை"மீண்டும் ஆள வா"!

*வரிகள் மழுவதும் அனுமதிக்க இயலாது
எனின் நீக்கம் செய்யும் பத்திகள்

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (25-Oct-15, 11:14 pm)
பார்வை : 58

மேலே