இறகும்நீ சிறகும் நீ

இறகும்..நீ.! சிறகும்.. நீ.!
அன்பின் -
பீலி கொண்டு
மேனி நெய்த
தோழி... நீ...!
என் -
மையல் ஈன்ற
களாப மயில்
காதல் தந்த
இறகும்... நீ...!
உன் -
நீல வண்ண
நினைவினாலே
ஜாலம் காட்டும்
கோலமிகும்
சிறகும்... நீ...!
நம் -
அந்தி வானில்
பந்தி வைக்க
முந்தியோடி
வருமே நித்தம்
நிலவு...ம்... நீ...!