மகா கவி தமிழன்பனுக்கு
தமிழுக்கும் அன்பும் உண்டு
தாராளம் மக்கள் உண்டு
சொல்லுக்கும் புகழுண்டு
சொல்லித் தரும் அழகும் உண்டு
தமிழ் நதியாக வரமும் உண்டு
நீந்திடவே கவியுமுண்டு
ஈரோடு பெற்றதுண்டு
இணையில்லா தமிழ் செண்டு
,
பார் புகழ போற்றல் உண்டு
பண்பு கண்ட செழுமை உண்டு
தமிழ் நதியில் மகா கவியுமுண்டு
மகா கவியில் தமிழ் நதியுமுண்டு
ஈடில்லா புகழும் உண்டு
இறைவன் அருள் நிறைய உண்டு
மகா கவி பேரும் உண்டு
மரியாதை பெற்றதுண்டு
பல்லாண்டு வாழ்வுமுண்டு
பார் போற்ற வாழ்த்தலுண்டு
தமிழன்பன் பெயரில் உண்டு
தமிழ் காக்கும் உரிமை உண்டு
தனை ஈன்ற தாய்க்கும் உண்டு
தமிழ் காக்கும் பெருமை உண்டு