ஆரோக்கியப் பொன் மொழிகள்

1.ஓட்ஸ் கஞ்சி அருந்தினால் ஒட்டகம்போல் நடக்கலாம்
ஓடலாம் !
ஓய்ந்து வீட்டில் அமர்ந்திருந்தால் --அது
மலச் சிக்கலுக்கு வழிவகுக்கலாம் !

அதிகப்படி ஆலோசனைக்கு அருகிலுள மருத்துவகத்தையோ தொலைவிலுள்ள மூலிகை
அல்லது ஆயுர்வேத வைத்திய சாலையை அணுகவும் .

2.நகைச் சுவை இன்றியே பூங்காவில்
வாய்விட்டுச் சிரிப்பது மன-உடல் பயிற்சி
நல்ல நகைசுவைக்கும் சிரிக்காமல் இருந்தால் --அது
ஹைட்ஸ் (HIDS) எனும் ஆரோக்கிய கேடு !
HIDS :--
HUMOUR INSUFFICIENCY CUM DEFICIENCY SYNDROME
ஆலோசனைக்கு வேறு எங்கும் போக வேண்டாம்
இங்குள்ள நகைச் சுவையில் சிரித்துப் பழகுங்கள் .

வள்ளுவர் டிப்ஸ் : இடுக்கண் வருங்கால் நகுக ...
நல்ல சிரிப்புக்கே சிரிப்பு வரமாட்டேங்குது .
இடுக்கண்ல சிரிக்கனுமாம்ல ...
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (27-Oct-15, 9:03 am)
பார்வை : 233

மேலே