ஆருயிர் தங்கத்துக்கு

அம்மா...அம்மா நான் என் வாழ்க்கையே போச்சு..ஹ்ம.ம்.ம்

என்னடி சொல்லற கனகா?

நான் ஊரில இல்லாததப் பயன்படுத்திட்டு என் வீட்டுக்காரர் தங்கம்-ங்கற பொண்ணுகூட தொடர்பு வச்சிருக்காரு.


அவுரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மனுசன். அவுரு மேல இது மாதிரி பழி சொல்லாதடி.


என்னம்மா நீ அவருக்கு ஆதரவாப் பேசற? நாங் குத்துக் கல்லாட்டம் இருக்கறபோது இன்னொரு பொண்ணோட தொடர்பு வைக்கறவரா நல்ல மனுசன். நீயே பாரு . எம் பேரு கனகாதான. இந்தக் கடிதத்தப் பாரு "அன்புள்ள என் ஆருயிர் தங்கத்துக்கு" ன்னு கடிதத்தின் மொதல் வரியிலேயே அவுரு யோக்கிதை தெரியுது.

அடியே மண்டு. கனகா-ன்னா தங்கம்ன்னுதாண்டி அர்த்தம். நீ பள்ளி இறுதி தேர்வை அஞ்சு தடவ எழுதியும்
தேர்ச்சி பெறல. 20 வயசு ஆச்சே இனியும் தேறப் போறதில்லன்னு உன்னோட மொறப் பையன் பட்டதாரி மாப்பிள்ளைக்கு உன்ன கல்யாணம் பண்ணிக் குடுத்தோம். மாப்பிள்ள படிச்சவருங்கறத நிரூபிச்சிட்டாரு.


என்ன மன்னிச்சிரும்மா.

எழுதியவர் : மலர் (27-Oct-15, 12:40 am)
பார்வை : 89

மேலே