களித்தேனே யான்

இதயத்தில் தேனாய் இனிதாய்க் கலந்தே
இதழகல் சிந்தை நிறைந்திடச் செய்யக்
கனிந்தேன் நெகிழ்ந்தேன் அழகில் சிலிர்த்தேன்
தனியாய்க் களித்தேனே யான் .

( இதழகல் வெண்பா )


இப்பாடல் "இதழகல்." எனப்படும் இதழொட்டாப் பா ஆகும். (உதடு) இதழ்கள் ஒட்டாமலும், குவியாமலும், வி(பி)ரிந்த நிலையில் பாடுகின்ற வகையாகும்.
அதாவது,
ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துள் மூன்றும்,
உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய உயிரெழுத்துகள் ஐந்தும்,
இவை முறையே உயிருடனும், மெய்யுடனும் உறழ, மொத்தம்
3+5: 8
3*12: 36
5*15: 75
----
119. எழுத்துகள் வராமல் இயற்றப்படுவது "இதழகல் பாக்கள்" எனப்படும்.
புணர்ச்சியில் உடம்படு மெய் வரும் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Oct-15, 12:04 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 49

மேலே