மது ,மாது-உடுமலை சேரா முஹமது
மது உன்னை
தின்று விடும்
மாது உன்னைக்
கொன்று விடும் !
மதுவால்
உனக்கு போதை
மாதுவால்
ஆகிவிடுவாய் பேதை !
மது
உடலை
தின்று விடும்
மாது
உள்ளத்தை
கொன்று விடும் !
மதுவால்
ஒரு நாள் மரணம்
மாதுவால்
தினம் தினம் மரணம் !