ஆருயிரே என்றாய்

இறந்த காலம் தான் ....
இனிமையான காலம் ....
இனிமையாய் நீ பேசி ....
இளமையை ரசித்தேன் ....
இப்போ தனிமையில் ....!!!

உனக்காய் வாழ்வேன் ...
உறுதியாய் கூறினாய் ....
உயிரை மறந்து வாழ்ந்தேன் .....
உயிர் வலிக்கிறது இப்போ ....!!!

அன்பே என்றாய் ....
அனைத்தையும் இழந்தேன் ....
ஆருயிரே என்றாய் ....
ஆவியாய் அலைகிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 876

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Oct-15, 8:15 pm)
Tanglish : aaruyire enraai
பார்வை : 187

மேலே