அணைந்து விடாதே

எட்ட
முடியாத காதலர் நாம் .....
சூரியனும் சந்திரனாய் ...
வானமும் நிலமுமாய் ...!!!

காதலை விதைத்தேன் ...
வதையாகும் உணர்ந்தேன் ...
காதல் ஆழ்கடல் -நீ
துறைமுகம் ....!!!

நான்
வெறும் நெருப்பு ...
நீயே வெப்பம் ...
நீயே ஒளி....
நீயே கரி ....
நீ தணல் .....
அணைந்து விடாதே ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 879

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Oct-15, 9:37 pm)
Tanglish : anaindu vidaathe
பார்வை : 228

மேலே