கண்ணீர் கடை

ஒருநாள் மாலை சுமார் ஒரு ஐந்து மனி இருந்து இருக்கும்.. நான் என் நண்பர்களோடு அரட்டை அடிப்பதர்க்காக நடுநிலை பள்ளியின் சுற்றுசுவரில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.. அப்போது திடீரென என்னுடைய அம்மா என்னை அலறி அடித்துக்கொண்டு அழைத்தாள்.. என்னவென்று ஓடி பார்த்தேன்.. பக்கத்து வீட்டில் உள்ள ராமுவின் சம்சாரம் தீயில் எரிந்துக்கொண்டு இருந்தாள்.. ராமுவோ சுய நினைவின்றி குடி போதையில் விழுந்து கிடந்தான். குடித்துவிட்டு அவன் செய்த ரகளையின் காரணமே அவளின் உடல் எரிந்துக்கொண்டு இருப்பதற்கு காரணம். பாதி தீயில் எரிந்து கொண்டு இருந்தவளை ஊர் மக்கள் காப்பற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ராமுவோ போதைதெளிந்ததும் மீண்டும் குடித்துவிட்டு விழுந்துகிடந்தான். அவளோ மூன்றுநாட்களாக உயிருக்கு போராடி உயிரை விட்டாள். அவளுடைய மூன்று பெண் பிள்ளைகளும் சோக கடலில் மூழ்கி கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தனர். ஊரே கூடி அவளுக்கு இறுதி சடங்கு செய்து அவளை அடக்கம் செய்தது ஆனால் ராமு மட்டும்தான் இல்லை. ராமுவுக்கு தேவையானது எல்லாம் இருப்பத்து நாண்கு மனிநேர தெளியாத போதைஅவள் இறந்துபோனது கூட தெரியாத அளவுக்கு பலநாட்களாக இருந்தான்..அவள் இறந்து ஒரு மாத காலத்திற்கு பிறகு அதே நடுநிலை பள்ளியின் சுவற்றில் அமர்ந்து கொண்டு இருந்தேன்.. அப்போது ராமுவின் மூத்த மகள் என்னிடம் வந்து கண்ணீர் மல்க எனக்கு எதாவது வேலை இருந்தா பார்த்து சொல்லுங்க அண்ணா.. வீட்டுல எல்லாரும் சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது என்றாள்.. என்னால் அதை கேட்டதும் தாங்க முடியவில்லை. என்னிடம் இருந்த 100ரூபாயை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு ஒரு செல்போன் கடையின் விசிடிங் கார்ட்டை அவளிடம் கொடுத்து அங்கு சென்று என் பெயரை சொல்லு என்று கூறி அங்கிருந்து கிளம்பினேன்.. சாலை யோரத்தில் குடித்துவிட்டு ராமு விழுந்துகிடந்ததை பார்த்துக்கொண்டே 10ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சின்ன குழந்தையின் படிப்பு பறிபோய்விட்டதே என்ற கவலையுடன் தமிழக அரசு அனுமதிபெற்ற மதுகடைய கடந்து கண்கலங்கிக்கொண்டே வீட்டிற்கு சென்றேன்.

எழுதியவர் : கார்த்திக் (29-Oct-15, 10:35 am)
சேர்த்தது : கார்த்திக்
Tanglish : kanneer kadai
பார்வை : 218

மேலே