ஒரு குடிமகனின் கதை

எல்லாக்கதையும் எப்படி ஆரம்பிக்குமோ.. அதே போல..

ஒரு நாட்டுல‌ ஒரு மனுசன் இருந்தானாம். இப்ப நீங்க அந்த நாட்டுல ஒரு மனுசன் மட்டும்தான் இருந்தானானு கேட்கக்கூடாது.

அவன் தான் அந்த நாட்டிலேயே மிகச்சிறந்த குடிமகன். குடிமகன்னா தப்பா நினைச்சுராதிங்க.. நாட்டுப்பற்றுள்ள மனுசன் இல்ல இவன்.. தண்ணி பற்றுள்ள மனுசன்..

எப்பப்ப எங்கங்க குடிக்கக்கூடாதோ.. அப்பப்ப அங்கெல்லாம் குடிச்சிட்டு அடிவாங்கறது தான் இவரு பொழப்பே...

நேரம் காலம் பார்க்காம குடிக்கறது மட்டுமல்ல.. நேரம் காலம் பார்க்காம அடிவாங்கறதும் இவருக்கு பொழுதுபோக்கா ஆச்சு..

அதுலேயும் இவங்க இவங்கட்ட தான் அடிவாங்கறதுன்னு இல்ல.. சின்ன பசங்கிட்ட இருந்து, பாட்டிங்க வரைக்கும் இவர் அடிவாங்காத ஆளுங்கலே இல்ல..

இவருக்கு குடிமகன் அப்படீங்கற பேரோட, அடிமகன் அப்படீன்னு ஒரு பேரு கூட வச்சிரலாம் போல... இவரு உங்க ஊரு அடி எங்க ஊரு அடி இல்ல, அடீன்னா அடி ஏகப்பட்ட அடி வாங்கியிருக்காரு கணக்கு வழக்கில்லாம...






அப்படித்தான் ஒரு நாள்..

காலங்காத்தாலேயே குடிச்சிட்டு யாரும் இல்லாத ரோட்ல கத்திக்கிட்டே தள்ளாடி தள்ளாடி நடந்து வந்துக்கிட்டு இருந்தாரு...

இவரு வர்றத பார்த்தாலே வீண்வம்புக்கு போகாதவங்க.. அவங்க பாட்டுக்கு விலகி போயிருவாங்க..

ஆனா அதே நேரம் வேல வெட்டியே இல்லாம தெருவுக்கு தெரு இருப்பாங்களெ ஒரு ரெண்டு மூணு பேரு.. அவங்களுக்கெல்லாம் இவர் தான் டைம் பாஸே...

அண்ணன் வர்றாரு.. அவரோட பேச்சுல இருக்கற தேவையில்லாத வார்த்தைகளை விட்டுட்டு மத்தத மட்டும் கொஞ்சம் மெதுவா கவனியிங்களேன்...

"நான் சொன்னா எல்லாம் கேப்பாங்க...ம்.. ஆமா..
நான் சொல்லித்தான் கவர்ன்மென்டே இந்த ரோட போட்டுச்சு... ஆமா...
என்ன.. ஹலோ.. பக்கத்து வீட்ல தீ புடுச்சுருச்சா.. ஆ என்ன அநியாயம்..
டிரிங் டிரிங் டிரிங்.. பயர் சர்வீஸ் சீக்கரம் இங்க வாங்க..
என்ன வரமாட்டிங்களா.. டைம் எடுக்குமா.. சரி சரி நான் பாத்துக்கிறேன்...டொக்.. என சொல்லிக்கொண்டே..
பக்கத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தவர்.. தீ பிடிக்காத வீட்டில் தீ பிடித்திருப்பதாக கூறி, எல்லோரையும் காப்பாற்ற நான் வந்திருக்கேன்" எனச்சொல்லி அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண்ணை தூக்கச்செல்ல....

விளாசப்பட்டார்... பளிர் பளிர் என கன்னம் வீங்க.. போதை எல்லாம் இறங்கிப்போய் வெளியில் வந்தார்.. வந்தவரை சட்டென வந்த ஒரு போலீஸ் ஜீப் அள்ளிக்கொண்டு சென்றது.. பிறகு உடம்பெல்லாம் வலியோடு ஒரு வாரம் கழித்துத்தான் வெளியே வந்தார்..

அன்று இவர் தீயிலிருந்து எல்லோரையும் காப்பாற்றுவதாக கூறி நுழைந்தது.. ஒரு லேடி இன்ஸ்பெக்டரின் வீடு...

அன்று விட்டவர் தான் குடியை... இப்போது உண்மையாகவே நல்ல குடிமகனாக வீட்டிற்கும், நாட்டிற்கும் உழைக்கிறார்..

இவரைப்போலவே எவராவது உங்கள் கண்ணில் பட்டால் உடனடியாக 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்... அந்த லேடி இன்ஸ்பெக்டர் இவர் போன்ற ஆட்களை பெண்ட் எடுக்க எப்போதுமே ரெடியாக இருக்கிறார்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-15, 9:27 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 230

மேலே