உங்க குதிரைக்காரப் பையன் எங்கே
ஏப்பா உங்க குதிரைக்காரப் பையன் எங்கே?
என்னப்பா சொல்லறே? எங்க வீட்டிலெ குதிரையுமில்ல குதிரைக்காரப் பையனும் இல்லப்பா.
சரி. உன்னோட மகன் பேரு என்ன?
எம் பையன்ம் பேரு அஷ்வின்.
அஷ்வின்-ன்னுக்கு என்ன அர்த்தம்?
அதெல்லாம் யாருக்கப்பா தெரியும். நாந் தீவிர சினிமா ரசிகன். ஒரு படத்ல வர்ற ஒரு கொழந்தையின் பேரு அஷ்வின். அந்தப் பேர எம் பையனுக்கு வச்சுட்டேன்.
உம் பையனத்தான் குதிரைக்காரன் எங்கேன்னு கேட்டேன். சமஸ்கிருதத்திலே அஷ்வின்- ன்னா குதிரை வைத்திருப்பவன் அல்லது குதிரையைப் பார்த்துக் கொள்பவன்-ன்னு அர்த்தம்.
அய்யய்யோ எம் பையம் பேருக்கு அர்த்தம் குதிரைக்காரனா?
வேணுமின்னா உம் பையம் பேரத் தமிழாக்கம் செஞ்சுக்க.
----------சிரிக்க அல்ல. சிந்திக்க.
மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.