ஆண்டவன் அளவற்றவன்

வெண்மதி ஒளி கொடுக்க
நீள்வான் இருளில் ஜொலித்தது...
மாமலை சுமக்கும் மாது பிரகாசிக்க
இறைவனின் இரகசியத்தை பரகசியமக்கிவிட்டது..
விடிந்ததும் திங்கள் வர
மறைந்தது விண்மீன்கள்...
வருவதும் மறைவதுமாய் அவை கண்ணாம்பூச்சியாட
அண்டம் அலங்காரத்தின் உச்சத்தில் துள்ளிக்குதித்தது...
சேமித்த தண்ணீர் செமிக்க
பூமியின் தேகம் நனைத்தது மேகம்..
பகழிபோல் சீறிப்பாய்ந்த
நயனங்கள் வீச்சத்தின் விட்டம் காணாது
என்னிடமே திரும்பி வர
அண்டம் பெறிதென்றுணர்ந்தேன்
ஆண்டவன் அளவற்றவன் என்றறிந்தேன்