மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள் - தெரிந்துகொள்வோம்

* நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது. - ஸ்ரீ அன்னை

* கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும். - ஜார்ஜ் எலியட்

* அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார் - ஓஷோ ரஜனீஷ்

* நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும். - நார்மன் வின்சென்ட்டில்

* இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன்

* யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள். - ரீடர்ஸ் டைஜஸ்ட்

* மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும். - அய்டா

எழுதியவர் : செல்வமணி (30-Oct-15, 9:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 351

மேலே