இணையதளத்தில் தமிழ்

இணையதளத்தில் தமிழ்
முன்னுரை
தகவல் தொடர்பில் ஊடகங்கள் என்பது தகவல்களை சேமித்து வைத்து மக்களின் தேவைக்கேற்ப வழங்கப் பயன்படும் கருவியாக உதவுகிறது. இது பெரும்பாலும் மக்கள் செய்திகள், கல்விச் செய்திகள், நீதிமன்றச் செய்திகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற நிகழ்வுகள், பொதுக் கூட்டங்கள், அறிவியல், பொருளாதார, விளையாட்டுச் செய்திகள் முதலியன வாழ்வியலின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஊடகங்களின் வழி மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
பரிணாம வளர்ச்சி
மனித (தகவல் தொடர்பு) பண்டைய காலங்களில் குகை ஓவியங்கள், வரைபடங்கள் மற்றும் எழுத்து ஆகியவற்றின் மூலம் நடைபெற்று வந்தது. பின்னர் இதழ்கள், வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, கணிப்பொறி, பேஜிங், செயற்கைக்கோள், இணையம் ஆகியவற்றின் வழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.
மக்கள் ஊடகம்
மக்கள் ஊடகம் என்பது பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக வடிவமைக்கப்படும். இது ஊடகத் துறையில் ஒரு பிரிவைக் குறிக்கும். நாடு தழுவிய வானொலி சேவைகள், செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்பவற்றின் அறிமுகத்தோடு 1920-களில் மக்கள் ஊடகம் என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது. மக்கள் ஊடகங்கள் என்று சொல்லத்தக்க புத்தகங்கள் போன்றவை இக்கருத்துருவாக்கத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இணைய ஊடகங்களுடாகத் தனிப்பட்டவர்களும், மக்கள் ஊடகத் தயாரிப்பாளர்களோடு ஒப்பிடக் கூடிய அளவுக்கு, மக்களைச் சென்றடையும் வசதிகள் இருப்பதனால் மக்கள் ஊடகம் என்னும் கருத்துரு சிக்கலடைந்துள்ளது.


மக்கள் செய்தி ஊடகம் வழியாகத் தகவலை ஒரே நேரத்தில் மக்கள் தொகையில் பல பகுதிகளுக்குப் பரப்புவதன் மூலமாக, பல்வேறு மட்டங்களில் தர்க்கரீதியான ஆய்வை மேற்கொள்ளப் பயன்படுகின்றன. இதனைப் பொதுவாக செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கை வெளியிடுதல், வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகியவற்றுக்குத் தொடர்புடையதாகும். இந்த மக்கள் ஊடகம் செய்தியைப் பரப்புவதற்கும், விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் ஊடகம்
இது தமிழர்களின் தொடர்பால் நடைபெறுகிறது. நாளிதழ், சிற்றிதழ், இதழ், நூல்கள், தமிழ் ஒலிபரப்புத்துறை. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் ஆகிய வடிவங்களின் ஊடாக தமிழ்த்தொடர்பால் இடம்பெறுகிறது. பெரும்பாலான ஊடகங்கள் ஒரு நிலப்பரப்புக்குள் உள்ள வாசகர்களை நோக்கியே அக்கறை காட்டுகின்றது. இணையம் உலகத்தமிழரையே இணைக்கும் ஒரு முக்கிய ஊடகமாக திகழ்கின்றது.
இணைய தளத்தில் தமிழ்
தமிழர்களால் ஏறத்தாழ 350 தமிழ் மென்பொருட்கள் தோன்றியுள்ளன. சொல்லாளர்களான கலைஞர் 99, கவிதாச் சொல்லாளர், பதமி, முரசு, இளங்கோ 2000, சுரபி 2000, அமுதம் இனஸ்;கிரிப்ட் 2000, ஆக்ருதி, பொன்மொழி முதலானவை கணினியில் தமிழ் உள்ளீடு செய்வதற்குப் பயன்படும் தமிழ் மென்பொருள்கள்.
தமிழில் வெளியாகும் பல நாளிதழ்களும், வார, மாத இதழ்களும் மின் இதழ்களாக இணையத்தில் வெளிவருகின்றன. இணையத்தில் முதல் மின் இதழ் என்னும் பெயர் பெற்றது ‘தேனீ,’றறற.வயஅடை.நெவஃவாநni என்ற தளத்திலும்;;, ‘ஆறாம் திணை’ றறற.யயசயஅவாநni.உழஅ என்ற தளத்திலும் வெளியாகின்றது.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகமே குக்கிராமமாக மாறி வருகிறது. இணையம் இதயங்களை இணைக்கின்றது. ஒத்த எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சமூகம் இணைய சமூகமாக மாறி வருகின்றன.
தமிழ் தொடர்புடைய கருத்துக்களின் கருவூலங்களாக சில இணையதளங்கள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழர்களின் சேவைக்காக திருக்குறள், ஒளவையார் படைப்புகள், திருவாசகம், ஆத்திச்சூடி, திருப்பாவை, புறநானூறு இன்னபிற இலக்கியங்களும் மின்னாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழர்கள் பயன்பெறும் வகையில் அமைந்து;ளளது.
இணையத்தில் சிதறிக் கிடக்கும் தமிழ் சார்ந்த செய்திகளைத் தேடித் தருவதற்கு பல தேடுபொறிகள் உள்ளன. சிங்கப்பூரைச் சார்ந்த றறற.யைபநவெ.வை.பழஎ.ளப தமிழில் முதல் தேடுமொழியாகிறது. இது தமிழ்க் களஞ்சியங்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
இணையம் வழித் தமிழ் கல்வி
கடல் கடந்து வாழும் தமிழ்ச் சமூகத்தினர் தம் சந்ததியினர் மொழியால், இனத்தால், பண்பாட்டால், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கத் தமிழறிவைத் தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய சூழலில் பல தமிழ்கல்வித் தளங்கள் உருவாக்கியுள்ளனர். தமிழில் தனிப்பயிற்சி; வழங்க முனைவர் எஸ்.இளங்கோ என்பவரால றறற.பநழஉவைநைள.உழஅஃயவாநளெஃயஉசழிழடளைஃ4715;,றறற.பநழஉவைநைளஃயவாநளெஃயஉசழிழடளைஃ8780 என்ற இணைய தளங்களை உருவாக்கியுள்ளனர்.
முடிவுரை
இன்றைய நவீன யுகத்தில் மக்கள் பலவிதமான தொழிநுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினாலும் அதில் முதன்மை வகிப்பது இணைய தளம். மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் இணையம் வழங்குகின்றது.

எழுதியவர் : பெ. பால்முருகன் (30-Oct-15, 11:29 am)
சேர்த்தது : கவி பாலு
பார்வை : 1400

மேலே